குமரியில் கொடி நாள் வசூல் - கலெக்டர் துவக்கி வைத்தார்.
டிசம்பர் 7ம் நாள் கொடி தினம் அனுசரிக்கப்படுகிறது
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கொடி நாள் வசூலினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், துவக்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் நாள் இந்தியா முழுவதும் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் அரசு முன்னாள் படைவீரர்களுக்கு, அவர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்து நன்றி பாராட்டி வருகிறது. கொடிநாளில் திரட்டப்படும் நிதியானது போர்க்களத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் கைம்பெண்கள், ஊனமுற்ற படை வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது விதவைகளின் மறுவாழ்விற்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதால் பொது மக்கள் அனைவரும் நிதியுதவி வாரி வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என்.ஸ்ரீதர், கேட்டுக்கொண்டார்
Tags
Next Story