கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

கொடி நாள் நிதி வழங்கிய அமைச்சர்

கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய படைவீரர் கொடிநாளை முன்னிட்டு, முன்னாள் படைவீரர் நலத்துறை மூலம் கொடிநாள் வசூலை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் நன்கொடை வழங்கி தொடங்கி வைத்தார். முப்படைகளை சேர்ந்த வீரர்கள் நாட்டின் பாதுகாப்புக்காகவும், இயற்கை சீற்றத்தினால் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்றும் பொருட்டும், உள்நாட்டு கலவரத்தின்போது அமைதியை நிலைநாட்டும் வகையிலும் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.

அவர்களது தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் டிசம்பர் 7-ந் தேதி படைவீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது. படைவீரர் கொடி நாளை முன்னிட்டு, திரட்டப்படும் நிதியில் இருந்து போரில் ஊனமுற்ற படை வீரர்கள், போரில் உயிர்நீத்த படைவீரர்களின் கைம்பெண்கள் ஆகியோரின் நலனுக்காகவும், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் விதவை நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. அ

தனடிப்படையில், 2022-ம் ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் கொடிநாள் நிதி இலக்காக ரூ.1.26 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.1.52 கோடி வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டிற்கான கொடி நாள் வசூல் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி தொடங்கி வைத்தார். மேலும், அனைவரும் தேசிய படைவீரர் கொடிநாளை முன்னிட்டு, நன்கொடை வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags

Next Story