கொடிநாள் நிதி வசூல்: தொடக்கி வைத்த ஆட்சியர் குடும்பத்தினர்
கொடி நாள் நிதியை தொடக்கி வைத்த ஆட்சியர் குடும்பத்தினர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் 2023ஆம் ஆண்டிற்கான படைவீரர் கொடிநாள் நிதி வசூல் உண்டியலில் பணம் போட்டு துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியரின் குடும்பத்தினர் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் ஏழாம் நாளை படை வீரர் கொடி நாளாக இந்திய அரசும் இந்திய மாநில அரசுகளும் கடைப்பிடிக்கின்றன.
இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. கொடி நாள் கொண்டாடும் மரபானது 1949ஆம் ஆண்டு டிசம்பர் ஏழாம் நாள் முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டைக் காக்கும் தியாக உணர்வுடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு அதனை நிறைவேற்றும் வகையில், கொடி விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் நன்கொடைகள் மூலம் திரட்டப்படும் நிதியானது படைவீரர்களின் குடும்ப நல்வாழ்வுக்காகவும், உடல் உறுப்புகளை இழந்த முன்னாள் வீரர்களின் மறுவாழ்வுப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் முகாமில் இன்று 2023ஆம் ஆண்டிற்கான படைவீரர் கொடிநாள் நிதி வசூல் உண்டியலில் பணம் போட்டு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பணம் போட்டு துவக்கி வைத்தனர் மேலும் படைவீரர்களின் குடும்பத்தினருக்கு இன்று தேனீர் விருந்து வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியர் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.