கொடிநாள் ஊர்வலம் - அலுவலர்கள் பங்கேற்பு
கொடிநாள் ஊர்வலம்
சேத்துப்பட்டு கொடி நாள் ஊர்வலம் தாசில்தார் வெங்கிடேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுதாலுக்கா அலுவலக வளாகத்தில் முன்னாள் ராணுவ வீரர்களின் தியாகம் மற்றும் அரும் பணிகளை போற்றியும், டிசம்பர்-07 தேசிய கொடி நாள் தினத்தை அனுசரித்து, பழம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி பழம் பேட்டை பள்ளி மாணவர்களின் தேசியக்கொடி நாள் ஊர்வலத்தை தாசில்தார் வெங்கிடேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சேத்துப்பட்டு - போளூர் சாலை, வந்தவாசி சாலை , ஆரணி சாலை ,காமராஜர் பேருந்து நிலையம் ,செஞ்சி சாலை வழியாக மாணவர்கள் ஊர்வலம் வந்தனர்.பொதுமக்கள் வியாபாரிகள் கொடிநாள் வசூல் தொகையை உண்டியலில் செலுத்தினர். ஊர்வலத்தில் தலைமை இடத்து துணை தாசில்தார் விஜயராணி, மண்டல துணை தாசில்தார் காஜா,தேர்தல் பிரிவு தாசில்தார் கோமதி, சுப்பிரமணி,போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன், குணசேகரன் மற்றும் அலுவலகத்தின் அனைத்து அரசு அலுவலர்களும் பழம்பெட்டை அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story