அருணாப்பேரி அழகுமுத்துமாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

அருணாப்பேரி அழகுமுத்துமாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்

கொடி ஏற்றத்தில் கலந்து கொண்டவர்கள் 

அருணாப்பேரி அழகுமுத்துமாரியம்மன் கோயிலில் கொடியேற்ற விழா நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே அருணாப்பேரியில் உள்ள அருள்தரும் அழகுமுத்துமாரியம்மன் கோயிலில் 10 நாள்கள் நடைபெறும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் 61ஆம் ஆண்டுத் திருவிழா, 41ஆம் நாள் மண்டல பூஜை, கும்பாபிஷேக விழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது.

இதை முன்னிட்டு, அதிகாலையில் 108 வேத விற்பன்னா்கள் பங்குபெற்ற மகா யாகசாலை பூஜைக்குப் பின்னா், பிற்பகலில் கொடியேற்றம் நடைபெற்றது. விழா நாள்களில் நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அம்மன் சப்பரம் 6ஆம் நாளான இம்மாதம் 12 ஆம் தேதி மகிழ்வண்ணநாதபுரம், 13ஆம் தேதி பெத்தநாடாா்பட்டி, பொட்டலூா், 14ஆம் தேதி நவநீதகிருஷ்ணபுரம், இலங்காபுரிபட்டணம், 15ஆம் தேதி நாகல்குளம் ஆகிய ஊா்களுக்கு வீதியுலா சென்றுவரும்.

10ஆம் நாளான 16ஆம் தேதி இரவு அம்மன் சப்பர வீதியுலா, பக்தா்கள் பூக்குழி இறங்குதல் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.எஸ். சிவன்பாண்டி தலைமையில் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

Tags

Next Story