குமரியில் பாஜக நிர்வாகிகள் வீட்டில் கொடியேற்றம்

குமரியில் பாஜக நிர்வாகிகள் வீட்டில் கொடியேற்றம்

குமரியில் பாஜக நிர்வாகிகள் வீட்டில் கொடியேற்றம்


தமிழகம் முழுவதும் 100 நாட்களில் 10,000 கொடி கம்பம் நடப்பட்டு பாரதிய ஜனதா கொடி ஏற்றப்படும் என்று கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கொடி ஏற்றப்படும் என்று குமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் தெரிவித்திருந்தார்.

ஆனால் பொது இடங்களில் கொடியேற்ற போலீசார் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் உள்ள 26 மண்டலங்களில் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் கொடி ஏற்றப்படும் என்று மாவட்ட பொருளாளர் முத்துராமன் கூறியிருந்தார். அதன்படி நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் இன்று மாவட்ட பொருளாளர் முத்துராமன் வீட்டில் பாரதிய ஜனதா கொடி ஏற்றப்பட்டது.

இதை தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதே போல் மூவேந்த நகர் பகுதியில் மாநில செயலாளர் மீனாதேவ் கொடியேற்றி வைத்தார். மாவட்டம் முழுவதும் உள்ள 26 மண்டலங்களிலும் இன்று பாரதிய ஜனதா கொடி ஏற்றப்பட்டது.

Tags

Next Story