காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் கொடியேற்றம்

காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் கொடியேற்றம்
X
காசி விஸ்வநாதர் 
தென்காசி காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் மாசி மகப் பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு காசி விஸ்வநாத சுவாமி கோவிலில் 11 நாட்கள் நடைபெறும் மாசி மகப் பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது. கொடி மரத்திற்கு பால், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு மந்திரங்கள் முழங்க அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் வருகிற 23-ம் தேதி சுவாமி அம்பாள் திருத் தேரோட்டம் நடைபெறுகிறது எனக்கு கோவில் நிர்வாகி தெரிவித்தனர்.

Tags

Next Story