ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் கொடியேற்று விழா
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பழமை வாய்ந்த ஐயப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆண்டுதோறும் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து செல்வது வழக்கம். இந்த ஆண்டு கோயிலில் இருந்து அதிக அளவிலான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல உள்ளனர்.
ஆலங்குடி ஐயப்பன் கோவில் இன்று மார்கழி ஒன்றாம் தேதியை முன்னிட்டு கணபதி ஹோமமும், பூர்ணாகுதியும் கொடி ஏற்று நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. மேலும் இதில் கோயிலை சுற்றி ஐயப்ப சாமி வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான ஐயப்பன் பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்ப சாமியை தரிசனம் செய்தனர்.
இன்று மாலை சாமி உற்சவர் வீதி உலா காட்சிகள் நடைபெற உள்ள நிலையில் தொடர்ந்து மார்கழி மாதம் முழுவதும் காலை மற்றும் மாலை வேலைகளில் இந்த ஆலங்குடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.