வணிகர் சங்கம் சார்பில் கொடியேற்று விழா

வணிகர் சங்கம் சார்பில் கொடியேற்று விழா

சங்கராபுரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட வணிகர் சங்கம் சார்பில் கொடியேற்று விழா நடந்தது.

சங்கராபுரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட வணிகர் சங்கம் சார்பில் கொடியேற்று விழா நடந்தது.

சங்கராபுரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட வணிகர் சங்கம் சார்பில் கொடியேற்று விழா நடந்தது. வணிகர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். பெட்ரோல் பங்க் உரிமை யாளர் சங்கத் தலைவர் ஜனார்தனன், நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் சீனிவாசன், மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன் வரவேற்றார். கள்ளக்குறிச்சி மாவட்ட வணிகர் கூட்டமைப்புத் தலைவர் செல்வ குமார் வணிகர் சங்க கொடியேற்றினார். மோட்டார் வாகன பழுது பார்போர் நலச்சங்கத் தலைவர் திருவேங்கடம் இனிப்பு வழங்கினார்.

Tags

Next Story