பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் கொடியேற்று விழா

பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் கொடியேற்று விழா

கொடியேற்று விழா 

பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் கொடியேற்று விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கத்தின் சார்பில், கொடியேற்று விழா மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சங்க அலுவலகத்தில், சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் சங்கத்தின் மாநில அமைப்பு செயலாளர் தங்கராசு, மாநி செயலாளர் தணிகைஅரசு, வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சன் மாரியப்பன், திருச்சி மாவட்ட அமைப்பு செயலாளர் நாராயணசாமி, ஆகியோர் கலந்து கொண்டு சங்கத்தின் கொடியேற்றி வைத்து உரையாற்றினார்கள்.

இதில் பெரம்பலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடந்து வருவதாக தகவல் வந்துள்ளது அதன் அடிப்படையில் அங்கு இருக்கக்கூடிய முக்கிய அலுவலர்களை சந்தித்து இது குறித்து பேசுவதற்காகவும் மேலும் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் 14 வது தமிழ் மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரம் நபர்கள் கலந்து கொள்வதாகவும் மேலும் தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதில் பின்னடைவு ஏற்பட்டு கொண்டிருக்கிறது,

சர்வர் சரியாக பணி செய்யாத காரணத்தினால் தொழிலாளர்கள் நலத்திட்டங்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது இதனை அரசு கவனத்தில் கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனை காப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்டத் துணைத் தலைவர் தமிழரசன், மாவட்ட துணைச் செயலாளர் சிவம் செந்தில், குமார், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் முன்னதாக பெரம்பலூர் 4ரோடு, இபி அலுவலகம் அருகிலும், எறையூர் சர்க்கரை ஆலை பகுதியிலும் மற்றும் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள கட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் கொடியேற்றுதல் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மாவட்ட செயல் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட அமைப்பு செயலாளர் சிவராஜ் மாவட்ட பொருளாளர் அமுதா கர்ணன், மாவட்ட துணைத் தலைவர் குழந்தை வேல், உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார் .

Tags

Next Story