காசி விஸ்வநாதர் கோவிலில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

காசி விஸ்வநாதர் கோவிலில் திருவிழா  கொடியேற்றத்துடன் துவக்கம்

பங்குனி திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை காசி விஸ்வநாதர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விசுவநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு ஸ்ரீ முருக பெருமான் வள்ளி, தெய்வானை தேவியர்களுடன் அமர்ந்தநிலையில் அருள் பாலிக்கிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் முசிவகங்கை,ஆன்மீக செய்திகள்,பங்குனி திருவிழா,ருகப்பெருமானுக்கு பங்குனி உத்திர தேர் திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது.

இவ்விழா முன்னிட்டு கொடியேற்ற வைபவம் நடைபெற்றது. முன்னதாக உற்சவர் முருக பெருமான், வள்ளி தெய்வானையுடன் சர்வ அலங்காரத்தில் பல்லக்கில் எழுந்தருள செய்து கோவில் உள்பிரகாரம் வலம் வந்தனர். தொடர்ந்து புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு பால், தண்ணீர் மற்றும் கலசத்தில் உள்ள புனித நீரால் அபிஷேகம் செய்து முருகன் திருஓவியம் வரையப்பட்ட வஸ்திரத்தை வேத மந்திரங்கள் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

இதனை அடுத்து தர்ப்பை புல், பட்டு வஸ்திரம், பூமாலைகள் சாற்றி உதிரி புஷ்பங்கள் கொண்டு அர்ச்சனைகள் நடைபெற்றன. நிறைவாக மகா பஞ்சமுக கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கும், கொடி மரத்திற்கும் காப்பு கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.

Tags

Next Story