தேர்தலை முன்னிட்டு கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி
ஊத்தங்கரையில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் மக்களவை தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவலர்கள் 100 க்கும் மேற்பட்டோர், ஆயுதம் ஏந்தி காவலர் அணிவகுப்பு பேரணியில் கலந்துக்கொண்டு. பொதுமக்கள் எந்தவித அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை வழியுறுத்தி பேரணி நடைபெற்றது. கொடி அணி வகுப்பு பேரணியை ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாள் பார்த்திபன் தொடங்கி வைத்தார்.
இதில் காவல் ஆய்வாளர்கள் ஊத்தங்கரை கந்தவேல், கல்லாவி தமிழரசி, சிங்காரப்பேட்டை சந்திரகுமார் மற்றும் அதிவிரைவு படை காவல்துறையினர், சிஆர்பிஎப்,துணை ராணுவப்படை என பலர் கலந்துக்கொண்டனர். தேர்தல் கொடி அணிவகுப்பு, ஊத்தங்கரை திருப்பத்தூர் செல்லும் சாலையில் தொடங்கி, பேருந்து நிலையம் வழியாக ஊத்தங்கரையின் முக்கிய சாலைகள் வழியாக ஊர்வலமாக சென்று. ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் முடிவுற்றது. இதில் அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் உள்பட, 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்துக்கொண்டு ஊர்வலமாக சென்றனர்.