பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி !

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி !

கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி

இந்த தேர்தலில் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் , 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தியும் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவத்தினர் தமிழகம் முழுவதும் கொடி அணி வகுப்பு நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நகர்ப்பகுதியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட துணை ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு. இந்திய நாட்டின் பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் களம் சூடு பிடிக்கத்துவங்கியுள்ளது.

இந்த தேர்தலில் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கும் வகையிலும் , 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தியும் காவல்துறையினர் மற்றும் துணை இராணுவத்தினர் தமிழகம் முழுவதும் கொடி அணி வகுப்பு நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நகர்ப் பகுதியில் திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் , இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சுழி குண்டாற்றுப் பாலம் அருகே துவங்கிய இந்த கொடி அணிவகுப்பினை திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த கொடி அணிவகுப்பில் சுமார் 300 க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினர் மற்றும் காவல்துறையினர் திருச்சுழி நகரின் முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தினர். இந்த கொடி அணிவகுப்பானது இராமேஸ்வரம் சாலையில் துவங்கி பேருந்துநிலையம், அருப்புக்கோட்டை சாலை வழியாகச் சென்று திருமேனிநாதர் கோவிலில் நிறைவு பெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story