புதுக்கோட்டை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் 66 அடி உயர கொடிமரம் ஏற்றம்

புதுக்கோட்டை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் தஞ்சை மறை மாவட்டத்திலேயே முதல்முறையாக 66 அடி உயரம் கொண்ட கொடிமரம் நடப்பட்டு, புனித கொடி ஏற்றப்பட்டது.

புதுக்கோட்டை திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் தஞ்சை மறை மாவட்டத்திலேயே முதல்முறையாக 66 அடி உயரம் கொண்ட கொடிமரம் நடப்பட்டு, புனித கொடி ஏற்றப்பட்டது...

புதுக்கோட்டை மார்த்தாண்டபுரத்தில் உள்ள திரு இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் தஞ்சை மறை மாவட்டத்திலேயே முதல் முறையாக 66 அடி உயரம் கொண்ட புதிய கொடி மரம் அமைக்க பணிகள் நடைபெற்றது. இதற்கான பணிகள் நிறைவு பெற்ற நிலையில் புதிய கொடிமரம் அமைக்கப்பட்டு, புனித கொடியில் திரு இருதய ஆண்டவர், இருதய மாதா படங்கள் பொறிக்கப்ட்டு, ஏராளமான கிறிஸ்தவர்களால் ஆலயத்தைச் சுற்றி கொடியை எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

இதனைத் தொடர்ந்து தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் அருட்தந்தை சகாயராஜ், புதிய கொடி மரத்தை ரிப்பன் திறந்து வைத்த நிலையில், புனித கொடியானது ஏற்றப்பட்டது. இதன் நினைவாக ஆலய வாளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலி ஆனது நடைபெற்றது. கொடியேற்றம் விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதில் புதுக்கோட்டை திரு இதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை சவரிநாயகம், உதவி பங்குத்தந்தை சந்தியாகு உள்ளிட்ட ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்...

Tags

Next Story