ஸ்ரீ வைகுண்டத்தில் வெள்ள பாதிப்பு - வத்திராயிருப்பு வந்த வாத்துகள்

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மேய்ச்சலுக்கு இடம் இல்லாததால்ஆயிரக்கணக்கான வாத்துக்களை மேய்ச்சலுக்காக வத்திராயிருப்பிற்கு கொண்டு வந்துள்ளனர்.

தூத்துக்குடி, நெல்லை ,தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த கனமழையில் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்தனர் . குறிப்பாக வீடுகளில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு பிராணிகளான ஆடு , மாடு, கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவைகளும் அடித்துச் செல்லப்பட்டது .வெள்ளத்தில் குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் பகுதி மழையின் காரணமாக பெரும் சேதத்தை சந்தித்தது.

ஸ்ரீவைகுண்டம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் லட்சக்கணக்கான வாத்துகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த வாத்துகளை மேய்ச்சலுக்கு ஒவ்வொரு பகுதியாக அறுவடை செய்யப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று மேச்சலுக்கு விடுவார்கள் .இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த வாத்து மேய்ப்பவர்கள் வெள்ளத்தில் சேதத்தின் காரணமாக பெறும் நஷ்டத்தை சந்தித்து தற்போது இருக்கும் வாத்துகளையாவது காப்பாற்றுவதற்கு வத்திராயிருப்பு பகுதிக்கு மேச்சலுக்காக கொண்டு வந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் நெல் அறுவடை பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஸ்ரீவைகுண்ம் பகுதியில் இருந்து 2000 வாத்துகள் கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்துச் ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த வாத்து மேய்க்கும் சங்கர் கூறும் பொழுது ,எங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு சேதங்களை சந்தித்ததாகவும் வாத்து குஞ்சுகள் அடித்துச் செல்லப்பட்டதால் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ,இருக்கும் வாத்துகளையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் வத்திராயிருப்பு பகுதிக்கு தற்போது மேச்சலுக்கு வாத்துகளை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இந்த பகுதியில் நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ளதாகவும், இருக்கும் வாத்துகளின் உயிர்களை காப்பாற்ற தற்போது மேச்சலுக்கு விட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நெல் அறுவடை செய்த பின்பு அறுவடை செய்த நிலத்தில் மேய்ந்தால் தான் முட்டை என்பது கிடைக்கும் எனவும், இன்னும் முட்டை கிடைப்பதற்கு 10 நாட்கள் வரை ஆகும் எனவும் தெரிவித்தார் .மேலும் வத்திராயிருப்ப பகுதியில் 45 நாட்கள் வரை வாத்துகளை மேய்ச்சலுக்கு விடுவோம் எனவும் தெரிவித்தார்.ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மேய்ச்சலுக்கு இடம் இல்லாததால்ஆயிரக்கணக்கான வாத்துக்களை மேய்ச்சலுக்காக வத்திராயிருப்பிற்கு கொண்டு வந்துள்ளனர்.

Tags

Next Story