வெள்ள நிவாரணம் பெறும் பகுதிகள்

வெள்ள நிவாரணம் பெறும் பகுதிகள்

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நிவாரண நிதி ரூ.6 ஆயிரம் பெறும் பகுதி அறிவிப்பு 

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நிவாரண நிதி ரூ.6 ஆயிரம் பெறும் பகுதி அறிவிப்பு
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீடு வீடாக டோக்கன் வழங்கப்பட்டது. நேற்று நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கியது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல் மற்றும் சாத்தான்குளம் ஆகிய 5 தாலுகாக்களில் முழுவதும் மொத்தம் 3 லட்சத்து 23 ஆயிரத்து 108 குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் மற்றும் கயத்தாறு ஆகிய தாலுகாக்களில் 2,44,717 குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது. நெல்லை, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி மற்றும் அம்பை தாலுகா அனைத்து பகுதிகளிலும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. திசையன்விளை தாலுகாவில் திசையன்விளை, அப்புவிளை, உறுமன்குளம், கரைசுத்து புதூர், கரைசுத்து உவரி மற்றும் குட்டம் ஆகிய வருவாய் கிராமங்களில் மொத்தம் 3 லட்சத்து 40 ஆயிரத்து 652 குடும்ப அட்டைகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது. பிற பகுதிகளான மானூர், நாங்குநேரி தாலுகா மற்றும் ராதாபுரம், திசையன்விளை தாலுகாகவில் பிற கிராமங்களில் உள்ள 1,63,705 குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது.

Tags

Next Story