திருச்சி : அதிமுக சார்பில் வெள்ள நிவாரணம்

திருச்சி : அதிமுக சார்பில்  வெள்ள நிவாரணம்

அதிமுக சார்ப்பில் வெள்ள நிவாரணம்

திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார் .
கடந்த வாரம் மிக்ஜாம் புயலால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது வரை பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர்,உணவு, பால் போன்ற அத்தியாவசிய உணவு இன்றி தவித்து வருகின்றனர். மக்களின் துயர்நீக்க திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் ஒவ்வொரு அதிமுக தொண்டனும் தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என வலியுறுத்தி இருந்தார்.‌அதன் அடிப்படையில் அதிமுக தொண்டர்கள் அளித்த அரிசி, குடிநீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை சேகரித்து இன்று தில்லைநகர் மாநகர் மாவட்ட அலுவலகத்தில் இருந்து சென்னைக்கு வெள்ள நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிந்தை முத்துக்குமார்,மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story