ரூ.4.25 கோடி செலவில் வெள்ள தடுப்பு சுவர் - ஆட்சியர் ஆய்வு

ரூ.4.25 கோடி செலவில் வெள்ள தடுப்பு சுவர் - ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

காமராஜபுரம் பாலாற்றங்கரையில் நீர்வளத் துறையின் சார்பில் கட்டப்பட்டு வரும் வெள்ள பாதுகாப்பு சுவர் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் அடுத்த வட விரிஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காமராஜபுரம் கிராமத்தில் உள்ள பாலாற்றங்கரையில் நீர்வளத் துறையின் சார்பில் ரூபாய் 4.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் வெள்ள பாதுகாப்பு சுவர் பணியை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்து வெளியேறும் நீரினால் குடியிருப்புகளில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தற்போது அமைக்கப்பட்டுள்ள சுவர் குறித்தும் ஆட்சியர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சீதா மற்றும் கே வி குப்பம் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story