வெள்ள அபாய எச்சரிக்கை

வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி வீதம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பூர்வீக பாசன பகுதி நிலங்களுக்கு தண்ணீர் திறப்பு தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 உயரம் கொண்ட வைகைஅணையின் நீர்மட்டம் தற்போது 65.62அடியாக உள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூன்றாம் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது அணையில் உள்ள சிறிய ஏழு மதகுகள் வழியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மொத்தம் 1004 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 15,119 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையிலும், நூற்றுக்கணக்கான கண்மாய்கள் நிரம்பும் வகையிலும், நூற்றுக்கணக்கான குடிநீர் ஆதாரங்கள் நரம்பும் வகையிலும் ஆற்றில் இந்த தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வைகைஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வைகை அணையில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது

Tags

Next Story