குமரி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
வெள்ள அபாய எச்சரிக்கை
குமரி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பாசன குளங்கள், அணைகள் நிரம்பி வழிகிறது. மேலும் இன்றும் தொடர்ந்து மழை பெய்வதால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கொட்டி தீர்த்துவரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. பேச்சிப்பாறை, மாம்பழத்துறையாறு, முக்கடல், சிற்றாறு அணைகள் ஏற்கனவே நிரம்பி வழி கின்றன. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியதையடுத்து ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேச்சிப் பாறை அணையின் நீர்மட்ட மும் வெகுவாக உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று மாலைக் குள் 42 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. அணை நீர்மட்டம் 42 அடி எட்டியதும் ஆற்றின் கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுவதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். இதனால் அணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகி றார்கள். திற்பரப்பு அருவி பகுதியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடு முறை தினமான இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பிற்கு வந்திருந்தனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.81 அடியாக உள்ளது. அணைக்கு 386 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 172 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.65 அடியாக உள்ளது. அணைக்கு 430 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 15.45 அடியாக வும், சிற்றாறு -2 அணை நீர்மட்டம் 15.55 அடியா கவும், பொய்கை அணை நீர்மட்டம் 8.70 அடியாகவும் உள்ளது.
Tags
Next Story