வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக, வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ள மொத்தம் 71 அடி உயரம் கொண்ட வைகைஅணை அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கடந்த ஆறாம் தேதி முழு கொள்ளலவை எட்டியது இதையடுத்து அணைக்கு வரும் நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வைகைஅணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2563 கன அடியிலிருந்து 5148 கன அடியாக அதிகரித்ததால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 5148 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது அணையில் உள்ள பிரதான 7 பெரிய மதகுகள் மற்றும் 7 சிறிய மதகுகள் வழியாக ஆற்றில் தண்ணீர் செல்வதால் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் வைகை ஆற்றில் யாரும் குளிப்பதற்காக இறங்க வேண்டாம் என்றும் வைகைஆற்றை கடக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் வைகை பொதுப்பணிதுறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் தற்போதைய நிலவரப்படி வைகை அணையில் நீர் இருப்பு 6091 மில்லியன் கன அடியாக உள்ளது

Tags

Next Story