கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

கும்பக்கரை அருவி 

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் வட்டக்காணல், வெள்ள கெவி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிற்பகலில் மழை பெய்ய தொடங்கிய நிலையில் இரவு முழுவதும் பெய்தது. மேலும் தற்பொழுதும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிப்பதாக வனத்துறை அறிவித்துள்ளனர். எனவே கடந்த 43 நாட்கள் பின்னர் நேற்று முன்தினம் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நிலையில் மீண்டும் வனத்துறையினர் குளிக்க தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேலும் நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story