திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு. - சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடு
ஆர்ப்பரித்து கொட்டும் அருவி
தொடர் மழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
குமரி மலை பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழை இரவு வரை ஒரு சில இடங்களில் நீடித்தது. இதனால் வரண்டு கட்டாந்தரையாக காணப்பட்ட கோதையாறு கரை புரண்டு ஓடியது. இதனால் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டியது.நேரம் செல்ல, செல்ல தண்ணீர் விழும் வேகம் அதிகரித்தது.
இதனால் அருவியின் பிரதான பகுதி மற்றும் அருவியின் கீழ் பகுதியில் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. பெண்கள் குளிக்கும் பகுதியில் மட்டும் பயணிகள் கட்டுப்பாடுடன் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.கோடை விடுமுறையால் சுற்றுலா களை கட்டிய நிலையில் பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது. மக்கள் கூட்டம் காலை முதல் அலை மோதியது.
Next Story