திற்பரப்பு அருவியில் வெள்ளப் பெருக்கு
வெள்ளப்பெருக்கு
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கோடை காலத்தில் நீர் பாய்வது குறைவாக இருக்கும். இந்த வேளையில் கடல் நீர் உட்புகுவதும், தண்ணீர் உப்பாக மாறுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. தற்போது வரட்சி என்பதால் கடல் நீர் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் புகுந்து உப்பாக மாறி உள்ளது இந்த உப்பு நீரை போக்குவதற்கு பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்தால் தீர்வு ஏற்படும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதர் உத்தரவுப்படி பேச்சிப்பாறை அணையில் இருந்து 1000 கன அடி தண்ணீர் நேற்று மாலை திறக்கப்பட்டது.
இதனால் கோதை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இன்று காலை அருவிக்கு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.