ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை

ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை
குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை
குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவிகளில் இன்று காலை முதல் ஏழு நாளுக்கு பிறகு குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகள் அருவியில் குறித்து மகிழ்ந்து சென்றனர்.

இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதினால் பழைய குற்றால அருவி ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு பாதுகாப்பு நலன் கருதி தற்காலிகமாக போலீசார் தடை விதித்துள்ளனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.. மேலும் மழை குறைந்த பிறகு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story