சதுரகிரியில் வெள்ளப்பெருக்கால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் வெள்ளப்பெருக்கால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல தடை. பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்ட சதுரகிரி கோயில்... விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் . இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், , பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறை ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. கடந்த இரண்டு தினங்களாக சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மாங்கனி ஓடை, வழுக்குப் பாறை , பாறை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் சதுரகிரி கோவில் அடிவாரப் பகுதியான தாணிப்பாறை பகுதி பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
Next Story