கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கொட்டகுடி ஆற்றில்  வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி மலை குரங்கணி வனப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக கொட்டகுடி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி வெள்ள நீர் செல்வதால் பொதுமக்கள் கொட்டக்குடி ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டுவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணியிலிருந்து சாரல் மழை துவங்கி இரவு முழுவதும் மிதமான கனமழையாக கொட்டி தீர்த்தது குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த இந்த கனமழை காரணமாக போடி அருகே உள்ள கொட்டக்குடி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. போடி அருகே கொட்டகுடி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு நீர்வீழ்ச்சியில் வெள்ளம் அபாய அளவை தாண்டி ஆர்ப்பரித்துக் கொண்டு செல்கிறது. இந்த வெள்ளம் காரணமாக பொதுமக்கள் கொட்டக்குடி ஆற்றில் குளிக்கவோ கடக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் கொட்டக்குடி ஆற்றுப்பகுதிகளில் காவல்துறையினர் குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story