கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆபத்தை உணராமல் குளிக்கும் பக்தர்கள்

கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு -ஆபத்தை உணராமல் குளிக்கும் பக்தர்கள்

வெள்ள பெருக்கு

தேனி மாவட்டம் போடி மேற்கு தொடர்ச்சி மலை பொதிகளான குரங்கணி கொட்டகுடி டாப் ஸ்டேஷன் பகுதிகளில் நேற்று நண்பகலில் இருந்து இரவு வரை கனமழையானது பெய்து வருகிறது. இதன் காரணமாக கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போடி அருகே உள்ள அணை பிள்ளையார் அணைக்கட்டு பகுதியில் வெள்ள நீரானது ஆர்பரித்துக் கொண்டு செல்கிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கட்டு பகுதியில் நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் அணைக்கட்டு பகுதியில் குளிக்க வேண்டாம் என பொதுப்பணித்துறையினரால் எச்சரிக்கப்பட்டுள்ளது இந்த எச்சரிக்கையை மீறியும் அதிகாலையில் ஐயப்ப பக்தர்கள் குளித்து வருகின்றனர். போடி பகுதியில் உள்ள குளங்கள் ஏற்கனவே நிரம்பிய நிலையில் ராஜ வாய்க்கால் மதகுகள் அடைக்கப்பட்டு அணைக்கட்டு பகுதியில் வரும் வெள்ளநீர் முழுவதும் வைகை அணைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ ,கொட்டகுடி ஆற்றை கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் தற்போது எச்சரித்துள்ளனர்

Tags

Next Story