கடம்பூர் அருகே பெய்த கனமழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு

கடம்பூர் அருகே பெய்த கனமழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு

 கடம்பூர் அருகே பெய்த கனமழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கடம்பூர் அருகே பெய்த கனமழையால் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடம்பூர் அருகே உள்ள மலை கிராமங்களில் நேற்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்டது, அதனையடுத்து மதியம் சுமார் 2 மணிக்கு மேல் காற்று வீசியது. அதனையடுத்து சின்ன குன்றி, கோவிலூர், பண்ணையத்தூர், கரியகவுண்டன் பைல், எப்பலூர், மாகாளித்தொட்டி, குஜ்ஜாம்பாளையம் ஆகிய மலைகிராம பகுதிகளில் காற்றுடன் சுமார் ஒரு மணிநேரம் கனமழை பெய்தது. இதனால், மழைநீர் ஆங்காங்கே சிறிய அளவில் பெருக்கெடுத்து ஓடியது, இந்த மழையால் அப்பகுதியில் குளிர்ச்சி நிலவியது, சிரிய அளவிலான பள்ளங்களை நோக்கி மழைநீர் ஓடியது.

Tags

Read MoreRead Less
Next Story