தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

தாமிரபரணியில் வெள்ளப் பெருக்கு - குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்

தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மாங்காடு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக வினாடிக்கு 636 கனஅடி தண் ணீர் திறக்கப்பட்டு உள்ளது. உபரியாக வினாடிக்கு 1536 கனஅடி தண்ணீர் வெளியேற் றப்பட்டது. இந்த உபரிநீரால் தாமிரபரணி ஆறு, பரளியாறு, வள்ளியாறு ஆகிய ஆறுகளிலும் மற்றும் பழையாற்று கால்வாயிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

வெள்ளப்பெருக்கு காரணமாக மங்காடு பகுதியில் உள்ள விளைநிலங்கள், தென்னந்தோப்புகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மங்காடு ஆற்றுப்பகுதியில் இருந்து முன்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு செல்லும் சாலை தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால் அங்கு போக்கு வரத்துதுண்டிக்கப்பட்டது. மேலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

Tags

Next Story