ஆற்றில் வெள்ளப்பெருக்கு ; மூடப்பட்ட தரை பாலம்

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ; மூடப்பட்ட தரை பாலம்

குழித்துறை தாமிரபரணி ஆறு

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தரை பாலம் மூடப்பட்டது.

தொடர் மழையால் குழித்துறை தாமிரபரணி ஆறு நிரம்பிப் பாய்கிறது. மார்த்தாண்டம், குழித் துறை மேல்புறம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதிலும் கடந்த மூன்று நாட்களாக இரவுதுவங்கி விடியவிடிய கனமழை பெய்கிறது. இதனால் அதிகாலை வேளையில் நடை பயிற்சி செல்பவர்கள் குடை பிடித்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. அத்துடன் பெண்கள் நடைபயிற்சியை தவிர்க்கின்றனர்.

தொடர் மழையால் குழித்துறை, மருதங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி உள்ளன. ஒரு சில குளங்கள் மறுகால் பாய்கிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து சுமார் 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப் பட்டு உள்ளதால் குழித்துறை தாமிரபரணி ஆறு நிரம்பிப் பாய்கிறது.குழித்துறை சப்பாத்து மேல் பகுதியில் சுமார் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டு உள்ளது.

Tags

Next Story