வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் பகுதிகளில் பக்தர்கள் குளிக்கும் பகுதியை மூழ்கடித்து செல்லும் வெள்ள நீர்

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் பகுதிகளில் பக்தர்கள் குளிக்கும் பகுதியை மூழ்கடித்து செல்லும் வெள்ள நீர்

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு
தேனி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணியிலிருந்து தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாற்றில் நீர்வரத்து அதிகரித்து வீரபாண்டி முல்லைப் பெரியாற்று பாலத்தில் இரு கரைகளையும் மூழ்கடித்து அபாய அளவை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. வீரபாண்டியில் உள்ள தடுப்பணையை மூழ்க வைக்கும் அளவிற்கு தற்போது வெள்ளை நீரானது ஆர்ப்பரித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கிறது. பொதுமக்கள் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஐயப்ப பக்தர்கள் ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி வெள்ளநீர் செல்வதால் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ கடக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆர்ப்பரித்துக் கொண்டு செல்லும் வெள்ள நீரை வீரபாண்டி பாலத்தில் மேல் பகுதியில் பொது மக்கள் செல்பி எடுத்து வருகின்றனர்.

Tags

Next Story