ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமான ஒகேனக்கல் காவிரி ஆறு, இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம் இதனையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்தும் சரிந்தும் காணப்பட்டு வருகிறது.
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 2000 கன அடி வீதம் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டுள்ள நிலையில் தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததை அடுத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 200 கன அடி வீதம் நீர்வரத்து சரிந்து காணப்படுகிறது தொடர்ந்து தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் நீரின் அளவை கணக்கிட்டு வருகின்றனர்.