நீர்வரத்து சரிவு... பாறைகளாக காணப்படும் காவிரி ஆறு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிந்து உள்ள நிலையில், தண்ணீர் பாய்ந்தோடிய இடங்களில் எங்கு பார்த்தாலும் பாறைகளாக வறண்டு காணப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்குள் நுழைகிறது. பருவமழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடும்போது காவிரி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடும்,அப்போது, மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். இதனை காண தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இவர்கள் தொங்கு பாலம், நடைபாதை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள்.

எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயினருவி, காவிரி ஆற்றின் கரைகளில் குளித்து மகிழ்வார்கள்.தற்போதைய நில வரப்படி ஒகேனக்கல் காவிரியில் விநாடிக்கு 200 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது. இத னால், கரைபுரண்டோடிய காவிரி ஆறு பாறை காடுகளாக காட்சி அளிக்கிறது. ஆர்ப்பரித்து கொட்டிய ஐந்தருவிகள் களையிழந்து வறண்டு காணப்படுகிறது. காவிரி ஆறுகுட்டையாக மாறி ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. பிரதான மெயினருவிக்கு மேல் பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பெண்கள் குளிக்கும் பகுதியில் சிறிதளவே தண்ணீர் கொட்டுகிறது.

தற்போது, கோடை காலம் தொடங்கிய நிலையில் தண்ணீர் வரத்து குறைந்ததால், நி காவிரி ஆற்றில் பாறைகள் அதிகம் தென்ப குடுகிறது. கொளுத்தும் வெயிலுக்கு பாறைக ளில் இருந்து அதிகம் வெப்பம் வெளியாகிறது. தண்ணீர் வரத்து சரிந்தாலும், சுற்றுலா பயணிகள் வருகையும் கணிசமான அளவு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story