ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து சரிவு

நீர்வரத்து சரிவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு சுமார் 1,000 கன அடியாக நீர் வரத்து சரிந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவேரி நீர் பிடிப்பு பகுதிகளில் மற்றும் கர்நாடக மாநிலங்கள் பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து 3 ஆயிரத்து 500 கன அடி விதம் நீர்வரத்து வந்து கொண்டிருந்தது மழையின் அளவு சரிந்ததை அடுத்து படிப்படியாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அளவும் சரிந்து நேற்று மாலை வரை 1500 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிந்து காணப்படுகிறது. மேலும் தமிழக கர்நாடக எல்லை பகுதியான பிலிகுண்டுளவில் தொடர்ந்து மத்திய நீர் வள மேலாண்மை துறை அதிகாரிகள் நீர்வரத்தினை கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story