தர்மபுரியில் பூக்கள் விலை உயர்வு

குறைந்த மழைளவு காரணமாக வரத்து குறைந்துள்ளதால், தர்மபுரியில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
தர்மபுரி, ஜன.1: தர்மபுரி புதிய பஸ் நிலையத்திற்குள் செயல்படும் பூ மார்க்கெட்டிற்கு தொப்பூர், முத்தம்பட்டி, பொம்மிடி, கடத்தூர்,பாலக்கோடு, பெல்ரம்பட்டி, மாரண்டஅள்ளி பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இருந்து தினந்தோறும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து சில்லரை விற்பனையாளர்கள் தேவைக்கேற்ப பூக்களை வாங்கி சென்று வியாபாரம் செய்கின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் மழை குறைவானதை யொட்டி பூக்கள் வரத்து குறைந்துள்ளது. தர்மபுரி பஸ் நிலைய பூ மார்க்கெட்டில் குண்டு மல்லி ரூ.1000, காக்கட்டான் மல்லி ரூ400, சன்னமல்லி ரூ1400, கனகாம்பரம் ரூ.400, பட்டன் ரோஸ் ரூ160, சாமந்தி ரூ120க்கு விற்பனை செய்யப்பட்டது. சீசன் முடிந்ததால் வரத்து குறைத்து சன்னமல்லி கிலோ ரூ1400க்கும்,குண்டு மல்லி ரூ.1000க்கும் விற்பனையானது.

Tags

Next Story