தர்மபுரி பேருந்து நிலைய பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிவு
விலை சரிவு
தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் நல்லம்பள்ளி அதியமான் கோட்டை,நார்த்தம்பட்டி, ஏலகிரி,சோலை கொட்டாய் காரிமங்கலம் மாட்லாம்பட்டி,பெரியாம்பட்டி, பழைய தர்மபுரி, வெண்ணாம்பட்டி,தடங்கம் .குள்ளனூர் கடகத்தூர்,குண்டல்பட்டி,செட்டி கரை,மேல் ராஜா தோப்பு,முக்கல் நாயக்கன்பட்டி .போன்ற பகுதிகளில் விவசாயிகள் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். நேற்று ஒரு கிலோ குண்டு மல்லி 1500 ரூபாய் விற்பனையான நிலையில் இன்று குண்டு மல்லி ஒரு கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையானது.
சன்ன மல்லி ஒரு கிலோ 400 ரூபாய் ரூபாய் கனகா மரம் 380 ரூபாய் காக்க நாம் பூ 350 ரூபாய், ரோஸ் ஒரு கட்டு 100 ரூபாய், ஜாதிமல்லி 200 ரூபாய், பன்னீர் ரோஸ் 100 ரூபாய்,அரளி ஒரு கிலோ 120 ரூபாய், கோலி கொண்டாய் 100 ரூபாய் சம்பங்கி 150 ரூபாய்,செண்டுமல்லி 80 ரூபாய்க்கும் சாமந்தி 120 ரூபாய்க்கும் பூக்கள் விற்பனையானது வியாபாரிகள் தெரிவித்தனர்.