கொடைக்கானலில் மலர் கண்காட்சி; ஆட்சியர் ஆய்வு

கொடைக்கானலில் மலர் கண்காட்சி;  ஆட்சியர் ஆய்வு

 கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மறுதினம் 61வது மலர் கண்காட்சி நடப்பதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி நேரில் ஆய்வு செய்தார். 

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை மறுதினம் 61வது மலர் கண்காட்சி நடப்பதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பூங்கொடி நேரில் ஆய்வு செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர்ப்பகுதியில் தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது, இந்த பூங்காவில் வருகின்ற வெள்ளிக்கிழமை(நாளை மறு நாள்) 61-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது,இந்த வருடம் நடைபெறும் மலர்கண்காட்சி மற்றும் கோடை விழா முதன் முறையாக 10நாட்கள் நடைபெற உள்ளது.

இதனையடுத்து பூங்காவிற்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் விதமாக 3 கட்டமாக வரவழைக்கப்பட்ட நாற்றுகள் நடவு செய்யபட்டு தற்போது லட்சக்கணக்கான மலர்கள் மலர்படுகைகளில் பூத்து குலுங்குகிறது,இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி நேரில் ஆய்வு மேற்கொண்டார்,இதில் மலர் செடிகள் வைக்கப்படும் அலங்கார மேடைகள், மயில்,சேவல்,டெடி பியர் உள்ளிட்ட உருவங்களில் பூக்களால் வடிவமைக்கப்பட்டு வரும் பணிகள்,சுற்றுலாப்பயணிகள் அமரும் இருக்கைகள் மற்றும் விழா நடைபெறும் மேடை உள்ளிட்வைகளை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து சுற்றுலாப்பயணிகளுக்கு குடி நீர்,கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும் அதனை எப்படி முறைபடுத்த வேண்டும் என ஆலோசனையும் வழங்கினார், மேலும் மலர் கண்காட்சி நடைபெறும் நாட்களில் போக்குவரத்து நெரசிலை கட்டுப்படுத்த கூடுதல் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்,இதில் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர்,வட்டாட்சியர்,காவல் துறையினர் உள்ளிட்டோர் இந்த ஆய்வில் உடன் இருந்தனர்.

Tags

Next Story