மலர்கண்காட்சி நுழைவு கட்டணம் உயர்வு
கொடைக்கானல் மலர் கண்காட்சி
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர்கண்காட்சி 10 நாட்கள் நடைபெறுவதால் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நாளை 61வது மலர் கண்காட்சி துவங்க உள்ளது.இந்த வருடம் முதன் முறையாக 10 நாட்கள் மலர் கண்காட்சியும்,கோடை விழாவும் நடைபெற உள்ளது... இதனையடுத்து மலர்கண்காட்சி நடைபெறும் 10 நாட்களுக்கு மட்டும் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பெரியவர்களுக்கு 30 ரூபாயாக இருந்த நிலையில் 75 ரூபாயாக உயரத்தப்பட்டுள்ளது.சிறியவர்களுக்கு 15 ரூபாயாக இருந்த நிலையில் 35 ரூபாய் என வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் உயர்த்தியதாக பிரையண்ட் பூங்கா தோட்டகலை துறை துணை அலுவலர் அறிவித்துள்ளார்.
Next Story