முத்துமாரியம்மன் கோவிலில் பூ பிரிக்கும் நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டத்தில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவப்பூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாசி பெருவிழாவை முன்னிட்டு நேற்று பூச்சொரிதல் வெகுவி விமர்சையாக தொடங்கியது இந்த பூச்சொரிதல் விழாவானது இன்று அதிகாலை 5 மணி வரை நடைபெற்றது. நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பல்லாக்குகளில் மின்னொளிகள் அமைக்கப்பட்டு அம்மனுக்கு புஷ்பத்தால் அலங்காரம் செய்யப்பட்டது.
ஒவ்வொரு பல்லாக்காக புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்த பூக்கள் அம்மனுக்கு சாத்தப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிக்கு பல்வேறு தெய்வங்கள் வடிவில் மற்றும் கும்மி ஆட்டம் நடைபெற்றது இந்நிலையில் இன்று காலை அம்மனுக்கு சாத்தப்பட்ட பூக்கள் பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக இவ்விழாவிற்கு வருகை புரிந்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது பின்னர் அம்மனுக்கு மகா தீபாரதனை கட்டப்பட்டது அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் . கட்டப்பட்ட பின்னர் பூக்கள் பிரித்து புதுக்கோட்டையில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொடுப்பதற்கு அனுப்பப்பட்டது.