கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

கோட்டை மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
X

அலங்கார ரத்தத்தில் அம்மன் பவனி 

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நடந்த பூச்சொரிதல் விழா மற்றும் திருவீதியுலாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா பூச்சொரிதல் விழாவும், அம்மன் திருத்தேரில் நகர் பகுதியில் வீதியுலாவும் இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தேரில் விநாயகர், ஐயப்பன், முருகன், அமர்ந்திருக்க தேரின் நடுவில் பிரம்மாண்டமாய் அம்மன் பூச்சொரிதல் அலங்கார ரதத்தில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story