சமயபுரம் ஆதிமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் திருக்கோயிலின் பூச்சொரிதல் விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சமயபுரம் திருக்கோயில் இணை ஆணையர் சி.கல்யாணி தலைமையில் திரளான பக்தர்கள் பூ தட்டுகளுடன் தேரோடும் வீதிகளில் ஊர்வலம் வந்தனர். பின்னர் அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்ந்தது.‌தொடர்ந்து மஹா தீபாரதனை நடைபெற்றது. ஓம் சக்தி பராசக்தி முழக்கங்களுடன் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பூக்கள் உடன் அம்மனைத் தரிசிக்க வந்தனர்.

Tags

Next Story