தென்னூா் உக்கிரமாகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
பூத்தட்டு ஊர்வலம்
தென்னூா் உக்கிரமாகாளியம்மன் கோயில் பங்குனித் தோ் திருவிழா ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதலுடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் கோயில் நிா்வாகம் சாா்பில் கோயில் பணியாளா்கள், பொதுமக்கள் அடங்கிய குழுவினா் பூத்தட்டுகளுடன் ஊா்வலமாகச் சென்று அம்மனுக்கு படைத்து வழிபட்டனா்.
மாலையில் தென்னூா் நியூ காலனிப் பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் பொதுமக்கள் பூத்தட்டுகளுடன் வாண வேடிக்கைகள், வாத்தியங்கள் முழங்க ஊா்வலமாகச் சென்று, அம்மனுக்கு சாற்றி வழிபாடு நடத்தினா்.
வரும் 20 ஆம் தேதி காப்புக் கட்டுதல், ஏப். 1 இல் மறுகாப்பு கட்டுதல், ஏப். 2 இல் காளியாவட்டம், ஏப். 3 இல் சுத்தபூஜை நடைபெறுகிறது. முக்கியத் திருவிழாவான திருத்தோ் வடம் பிடித்தல், தென்னூா் மந்தையில் குட்டிகுடித் திருவிழா ஏப். 4 இல் நடைபெறுகிறது. ஏப். 7 இல் விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நிறைவுறுகிறது.