கோடை காலத்தில் பூத்து குலுங்கும் சரக்கொன்றை பூக்கள்

காங்கேயம் வாய்க்கால் மேடுபகுதியில் கோடை காலத்தில் சரக்கொன்றை பூக்கள் அழகாக பூத்துள்ளன.

கொன்றை மலர் தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. இந்த மலர் கேரளாவின் மாநில மலர்‌ என கூறப்படுகிறது. சிறந்த மருத்துவ குணங்கள் அதிகமுள்ள மலராகும். மேலும் பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய மலராகவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்துக்கள், கொன்றைப் பூவை சிவனின் பூஜைக்குரியதாகக் கருதுகின்றனர். மேலும் இந்த பூ தமிழ் புத்தாண்டான சித்திரை மாதத்தை வரவேற்கும் விதமாக சித்திரை மாதத்தில் பொன்னிற கொன்றை மலர்கள் சரம் சரமாக பூத்துக் குலுங்குவதுண்டு. குறிப்பாக, சித்திரை மாதத்தில் மட்டும் இந்த பூ பூப்பது அதிசயம்.

மேலும் வெப்ப மண்டலம் மற்றும் குறைந்த வெப்ப மண்டலப் பகுதிகளில் நன்றாக வளரக்கூடியது. நீர் வடியக்கூடிய நிலத்தில் சிறப்பாக வளரும். கோடை வறட்சியையும் தாங்கக் கூடியது. சரக்கொன்றை மரத்தின் பூ, இலை மற்றும் மரப் பட்டைக்கு பல்வேறு மருத்துவக்குணங்கள் உள்ளது. பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் முக்கியமாக சக்கரை வியாதிக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. சரக்கொன்றை பூவையும் இளம்கொழுந்தையும் துவையல் செய்து சாப்பிடலாம், பூவை கஷாயம் செய்து சாப்பிடலாம்.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் சாப்பிட்டால் மலப்பிரச்னை சரியாகும். கொன்றை மலரில் பல வகைகள் உண்டு. அவை, சரக்கொன்றை, சிறுகொன்றை, செங்கொன்றை, கருங்கொன்றை, மஞ்சள்கொன்றை, மயில்கொன்றை, புலிநகக்கொன்றை, பெருங்கொன்றை, மந்தாரக்கொன்றை மற்றும் முட்கொன்றை எனப் பல கொன்றைகள் இருந்தாலும், சரக்கொன்றைதான் மிகவும் பிரசித்தி பெற்றது எனவும் இம்மரம் கிரகங்களின் கெட்ட கதிர் வீச்சுக்களை இழுத்துக் கொண்டு, நமக்கு நற்பயன்களை அளிக்கும். இம்மரத்தை வீட்டில் வளர்ப்பதினால் அந்த வீடு எப்பொழுதும் தெய்வ கடாட்சம் நிறைந்ததாகக் காட்சி தரும் எனவும் கூறப்படுகிறது.

Tags

Next Story