கழிவு நீர் கால்வாயை ஆக்கிரமித்த நெகிழிகள் - நோய் தொற்று அபாயம்

கழிவு நீர் கால்வாயை ஆக்கிரமித்த நெகிழிகள் - நோய் தொற்று அபாயம்

நெகிழி குப்பைகள் 

சங்ககிரி அரசு பள்ளிகளின் அருகே கழிவுநீர் கால்வாயில் நெகிழி குப்பைகள் நிரம்பி வழிவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சிக்குபட்ட சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் சாலை பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் சிலர் நெகிழி குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதில் கழிவு நீர் செல்லா வழியின்றி தேங்கி நிற்கிறது .மேலும் இந்த சாக்கடை கால்வாய் அருகில் அரசு தொடக்க பள்ளி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருவதால் பள்ளி குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அரசு பள்ளி குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு கழிவுநீர் கால்வாயில் நெகிழி குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story