பணம் பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள்

பணம் பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட இரண்டு லட்சத்தி 80 ஆயிரம் ரூபாய் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் தமிழக முழுவதும் வந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி பணம் பட்டுவாடா நடைபெறாமல் இருப்பதற்காக ஆங்காங்கே வாகன தணிக்கைகள் நடந்து வருகிறது.

ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தேர்தல் உதவி அலுவலர் சண்முகவேலு தலைமையில், மூன்று பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியான சிவசக்தி நகர் பகுதியில் மூன்றாவது பிரிவில் பொறுப்பு அதிகாரி பரமசிவம் தலைமையில் வாகன தணிக்கை ஈடுபட்டிருந்த பொழுது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் உரிய ஆவணம் இன்றி வைத்திருந்த 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தனியார் பெட்ரோல் பங்கில் பணிபுரிவதாகவும் அதன் வருவாயை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார். இருப்பினும் அவரிடம் ஆதாரம் ஏதும் இல்லாததால் பறக்குப்படை பொறுப்பாளர் பரமசிவம் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் உதவி அலுவலர் சண்முகவேலிடம் ஒப்படைத்தார்.

இதேபோல் பள்ளிபாளையம் பகுதியில் பறக்கும் படை இரண்டாவது பிரிவின் பொறுப்பு அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது பள்ளிபாளையம் சாய தொழிற்சாலையில் பிளீச்சிங் செய்வதற்காக கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு லட்சத்து 63,000 மதிப்புடைய 3,265 துண்டுகளை உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்ததற்காக பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.. பறக்கும் படை அலுவலர் திவாகர் தலைமையில், பள்ளிபாளையம், ஒடப்பள்ளி பகுதியில், ரூபாய் இரண்டு லட்சத்து, 14 ஆயிரத்து, 720 மதிப்பிலான 2,684 லுங்கிகள், எந்த ஆவணமும் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது

Tags

Next Story