திட்டுப்பாறையில் பறக்கும் படை சோதனையில் ரூ. 57 ஆயிரத்து 500 பறிமுதல்

காங்கேயம் அடுத்த திட்டுப்பாதை அருகே பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேல் ஈடுபட்டு வந்தனர் அப்போது கொடுவாயைச் சேர்ந்த சிவ செந்தில் என்பவர் ஆட்டோவில் ஆவணங்கள் இன்றி ரூ 57 ஆயிரத்து 500 ரூபாய் கொண்டு வந்தவரிடம் பறிமுதல் செய்யப்பட்டது
ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படை அதிகாரி இராமசாமி (துணை வட்டார வளர்ச்சி அலுவலர்), தலைமையில் கண்காணிப்பு குழு காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கயம் - சென்னிமலை சாலையில் திட்டுபாறை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது காங்கேயம்‌ அடுத்த கொடுவாயை சேர்ந்த சிவசெந்தில் என்பவர் தனது லோடு ஆட்டோ வாகனத்தில் எவ்வித ஆவணங்களுமின்றி ரூ. 57 ஆயிரத்து 500 ஐ கொண்டு வந்தது சோதனையில் தெரியவந்தது. எனவே தேர்தல் நடத்தை விதிகளின்படி ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் ஆவணங்கள் ஏதுமின்றி பணம் கொண்டு வருவது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பது தெரிவிக்கப்பட்டு‌ அவர் வைத்திருந்த ரொக்கப்‌ பணத்தை கைப்பற்றி காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமியிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story