முதலமைச்சர் வருகையை ஒட்டி சேலத்தில் டிரோன்கள் பறக்க தடை

முதலமைச்சர் வருகையை ஒட்டி சேலத்தில் டிரோன்கள் பறக்க தடை
X

டிரோன்கள் பறக்க தடை

முதலமைச்சர் வருகையை ஒட்டி சேலத்தில் டிரோன்கள் பறக்க தடை விதித்து கலெக்டர் பிருந்தா தேவி உத்தரவு
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் தருமபுரி மாவட்டத்தில் நாளை (11-ந் தேதி) திங்கட்கிழமை நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கவும் உள்ளார்கள். இதற்காக, நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் காமலாபுரம் விமான நிலையம் வருகை புரிந்து, தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சென்னை திரும்புகிறார். இதனையொட்டி சேலம் மாவட்டத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story