தென்காசி திமுக நிர்வாகி வீட்டில் பறக்கும் படையினர் திடீர் சோதனை

தென்காசி திமுக நிர்வாகி வீட்டில் பறக்கும் படையினர் திடீர் சோதனை

அதிகாரிகள் சோதனை நடத்தினர் 

தென்காசி திமுக நிர்வாகி வீட்டில் பறக்கும் படையினர் திடீர் சோதனை நடத்தினர்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சு. பாலாமணி நேற்று திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாருக்கு ஆதரவாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த எதிர்க்கட்சியைச் சார்ந்த ஒருவர் பாலாமணி வீட்டில் கட்டு கட்டாக பணம் இருப்பதாகவும் அது திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பொதுமக்களிடம் விநியோகிக்க வைத்திருப்பதாகவும் உடனடியாக சோதனை நடத்த வேண்டும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

அவரது பேச்சை நம்பி கீழப்புலியூர் பகுதியில் உள்ள திமுக பிரமுகர்பாலாமணியின் இல்லத்திற்கு போலீசார் உடன் வந்த பறக்கும் படை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத் தினர். அந்தச் சோதனையில் அவரது வீட்டில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லாததால் திரும்பிச் சென்றனர். அதன் பிறகு சிறிது நேரத்தில் மீண்டும் பாலாமணியின் வீட்டிற்கு வந்த பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வீட்டிற்கு

வெளியே நிறுத்தப்பட்டிருந்த பாலாமணிக்கு சொந்தமான 4 சக்கர வாகனங்களில் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போதும் பணம் பரிசுப் பொருட்கள் எதுவும் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் வெறும் கையோடு திரும்பி சென்றனர்.

Tags

Next Story