தமிழக - கர்நாடக எல்லையில் பறக்கும் படையினர் வாகன சோதனை

தமிழக - கர்நாடக எல்லையில் பறக்கும் படையினர்  வாகன சோதனை

வாகன சோதனை 

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறுவதையொட்டி தமிழக - கர்நாடக எல்லையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் மற்றும் சில மாநிலங்களில் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில் அண்டை மாநிலங்களான கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

கர்நாடக தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள், பணம் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பறக்கும் படை அமைத்து வாகன சோதனை நடத்தி வருகிறது. கர்நாடக தேர்தல் நடைபெறுவதையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தி அடுத்துள்ள தமிழக - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள காரப்பள்ளம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் கர்நாடக மாநிலம் நோக்கி செல்லும் வாகனங்களை நிறுத்தி தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.வாகனங்களில் செல்வோர் பணம் ரூ.50 ஆயிரத்திற்கும் மேலும், வாக்காளர்களுக்கு ஏதாவது பரிசு பொருள்களும் கொண்டு செல்கிறார்கள என கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story